தமிழர்களின் நூலோடு தறியில் நுட்பம்

தமிழ் மக்கள் நெசவுத் தொழிலை (Handloom) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டு உணர்ந்து உள்ளனர். பருத்தி தொன்றுதொட்டு தென்னாட்டில் விளைந்து வருகிறது.  பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், தையலையும் தமிழர் அறிந்திருந்தனர். இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பதை சங்கப் பாக்களால் உணர முடிகிறது. சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற “ஆளில் பெண்டிர் தாளின் தந்த நுணங்கு நூல் பனுவல்” ஆதரவற்ற பெண்கள் தமது சுய முயற்சியால் நூற்ற நூல் என்பதே அதனுடைய உவமையாகும். அப்பெண்களை… Read More