80 வயதை நெருங்கும் பாட்டி அவர்கள். இருக்கும் சொற்பமான முடியை அழகாய் டிரிம் செய்து, அதற்கு அவ்வப்போது திரிபலாதி கேரம் தைலம் போட்டு பாதுகாத்து, அவர்கள் மிடுக்காய் நடந்து வரும் அழகு, முதுமையின் வசீகரம். என்னைப் பார்த்ததும் அவர்கள் முதல் கேள்வி.. “ரெகுலரா வாக்கிங் போறீங்களா, டாக்டர்?” என்பது தான். உடல் நலத்தில் அக்கறையாய் உள்ள அவர்கள் வீட்டிலிருந்து, சமீபமாய் ஒரு அவசரத் தொலைபேசி. “பாட்டி விழுந்துட்டாங்க.. நடக்க முடியலை..கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா?”- என்றது எதிர்… Read More